கிரிக்கெட்

ஆசிய விளையாட்டு: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தான் அணிகள்

மழை காரணமாக இன்று காலிறுதி சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

ஆசிய விளையாட்டின் கிரிக்கெட்டில் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறி உள்ளன.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் மற்றும் மலேசியா அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில் முதல் காலிறுதியில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோத இருந்தன. தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டது.

இதேபோல், இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான காலிறுதி ஆட்டமும் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்துசெய்யப்பட்டது.

இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

SCROLL FOR NEXT