மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை துபாயில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ஆகஸ்ட் 28 அன்று துபாயில் தொடங்குகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
அரையிறுதி போட்டிகள் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும், இறுதிப்போட்டி செப்டம்பர் 13-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், விளையாட்டில் பரம எதிரிகளாகக் கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் தாய்லாந்து, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.