கிரிக்கெட்

338 ரன்கள் இலக்கு: ஜூனியர் ஆசிய கோப்பையை மீண்டும் வெல்லுமா இந்தியா?

பாகிஸ்தானின் உஸ்மான் கான் சதமடித்து 107 ரன்னில் அவுட்டானார்.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 338 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதியில் இந்தியா ஆப்கானிஸ்தானையும், பாகிஸ்தான் வங்கதேசத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

டாஸ் வென்ற பாகிஸ்தான்

இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆடியது.

முதல் விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்த நிலையில் ஹயாம் கான் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அப்துல் காதிர் அதிரடி

அடுத்து இறங்கிய அப்துல் காதிர், உஸ்மான் கானுடன் இணைந்தார். இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது.

2வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்த நிலையில் அப்துல் காதிர் 54 பந்தில் 8 சிக்சர் உள்பட 80 ரன்கள் குவித்து அவுட்டானார்.

சதமடித்த உஸ்மான் கான்

தொடர்ந்து சிறப்பாக ஆடிய உஸ்மான் கான் சதமடித்து 107 ரன்னில் வெளியேறினார்.

பர்ஹான் யூசுப் அரை சதம்

கேப்டன் பர்ஹான் யூசுப் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது.

இந்தியா சார்பில் காவியா படேல் 4 விக்கெட்டும், சிகுருபடி வெங்கடா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT