இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 247 ரன்களைக் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4வது டி20 போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப், ஜுவல் ஆண்ட்ரூ ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த நிலையில் ஜுவல் ஆண்ட்ரூ 21 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஹெட்மயர் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 12 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 33 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய ஷாய் ஹோப் நடப்பு தொடரில் 2வது முறையாக சதம் கடந்து அசத்தினார்.
ரோவ்மன் பவெல் 17 பந்தில் 24 ரன் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்தது. ஷாய் ஹோப் 102 ரன்னும், ரூதர்போர்டு 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.