கிரிக்கெட்

மீண்டும் கிளென் பிலிப்ஸ் அதிரடி: இந்தியா வெற்றிபெற 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ், பெவன் ஜேக்கப்ஸ் ஆகியோர் அரை சதம் கடந்து அசத்தினர்.

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார்.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டிம் செபர்ட் 7 ரன்னும், டேரில் மிட்செல் 6 ரன்னும், பின் ஆலன் 16 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

கிளென் பிலிப்ஸ் அரை சதம்

4வது விக்கெட்டுக்கு கிளென் பிலிப்ஸ், பெவன் ஜேக்கப்ஸ் ஜோடி இணைந்து அதிரடியில் மிரட்டியது. இருவரும் அரைசதம் கடந்தனர்.

கடந்த ஆட்டத்தைப் போலவே கிளென் பிலிப்ஸ் 43 பந்தில் 70 ரன் குவித்து ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 76 பந்தில் 116 ரன்கள் குவித்தது.

ஜேக்கப்ஸ் அரை சதம்

பொறுப்புடன் ஆடிய பெவன் ஜேக்கப்ஸ் 46 பந்தில் 58 ரன் எடுத்து அவுட்டானார்.

இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், பிரின்ஸ் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT