கிரிக்கெட்

2வது டி20 போட்டி: இந்தியா வெற்றிபெற 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

டெல்லியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார்.

2வது விக்கெட்டுக்கு இப்ராகிம் ஜட்ரன், செடிகுல்லா அடல் ஜோடி 51 ரன் சேர்த்த நிலையில் ஜட்ரன் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின், வந்தவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து திணறியது.

7வது விக்கெட்டுக்கு முகமது நபி, ரஷித் கான் ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடி 28 பந்தில் 48 ரன்களை சேர்த்தது.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், நிதிஷ்குமார் ரெட்டி விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT