கிரிக்கெட்

வரலாற்றில் முதல் முறை: இந்தியா, ஜப்பான் மோதும் டி20 போட்டி

இரு நாடுகளின் ஆண்கள் கிரிக்கெட் அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.

இந்தியா, ஜப்பான் இடையிலான தூதரக உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் முதல் முறையாக டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

75 ஆண்டு தூதரக உறவு

இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவைக் குறிக்கும் வகையில், இரு நாடுகளின் ஆண்கள் கிரிக்கெட் அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.

ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

சுசூகி கோப்பை

செப்டம்பர் 22ம் தேதி அன்று ஜப்பானில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இந்தப் போட்டிக்கு 'சுசூகி கோப்பை' என பெயரிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவுகளின் கொண்டாட்டத்தின் முதல் படியாக இந்தப் போட்டியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான உலக சாம்பியன் இந்திய அணி ஜப்பானில் முதல் முறையாக விளையாட உள்ளதால், இது ஜப்பான் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற சில வீரர்கள் 2020-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT