இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் விளாச இந்தியா ஒரு பந்தை மீதம் வைத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் முதன்முதலாக 200 வெற்றிகளை பெற்ற அணி என்ற அசுர சாதனையைப் படைத்துள்ளது. பிரான்சைஸ், உள்ளூர் அணி எந்த வகையிலும் இந்தியாதான் 200 வெற்றிகளை ருசித்துள்ளது.
இந்தியா 2006 முதல் தற்போது வரை 300 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 200 வெற்றிகளை பெற்றுள்ளது. 83 முறை தோல்வியை சந்தித்துள்ளது. 10 போட்டிகளில் முடிவுகள் எட்டப்படவில்லை. 7 போட்டிகள் டையில் முடிவடைந்துள்ளன.
பாகிஸ்தான் 304 போட்டிகளில் 176-ல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து 269 போட்டிகளில் 135-ல் வெற்றி பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா 235 போட்டிகளில் 129-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 229 போட்டிகளில் 127-ல் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் உள்ளூர் அணியான சோமர்சேட் 174 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. லங்காஷைர், மும்பை இந்தியன்ஸ் (ஐபிஎல் பிரான்சைஸ் அணி) தலா 166 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை சூபப்ர் கிங்ஸ் (ஐபிஎல் பிரான்சைஸ்) 163 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுர்ரே (இங்கிலாந்து உள்ளூர் அணி) 163 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.