கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்து இந்தியா சாதனை

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 195 ரன்கள் குவித்தது.

மாலை மலர்

கொல்கத்தா:

டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்தார். ஹோலட்ர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது.

முன்னதாக, கடந்த 2014 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சேசிங்கில் 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.