கிரிக்கெட்

பிரதிகா ராவல் அசத்தல் சதம்: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்தியாவின் பிரதிகா ராவல் சதமடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் 197 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பெலவ்டு பிசா அரை சதம் கடந்து 62 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறினர்.

இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்

இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டும், கிராந்தி கவுட் 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவல் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.

முதல் விக்கெட்டுக்கு பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஜோடி 94 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா 32 ரன்னில் அவுட்டானார்.

பிரதிகா ராவல் சதம்

2வது விக்கெட்டுக்கு பிரதிகா ராவலுடன் ஷபாலி வர்மா இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தது.

இறுதியில், இந்திய மகளிர் அணி 27.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிரதிகா ராவல் 100 ரன்னுடனும், ஷபாலி வர்மா 64 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ஆட்ட நாயகி விருது பிரதிகா ராவலுக்கு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT