வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றிபெற 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது யுஏஇ ஏ அணி.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆப்கானிஸ்தான் 'ஏ', வங்கதேசம் 'ஏ'. இலங்கை 'ஏ'. ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா 'ஏ', நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் 'ஏ', ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
முதல் லீக் போட்டியில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது. 2வது லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி வீழ்ந்தது.
இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் இந்தியா 'ஏ' , ஐக்கிய அரபு அமீரகம் ஏ அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் ஹர்பிரீத் சிங் பாட்டியா தனி ஆளாகப் போராடினார்.
சிறப்பாக ஆடிய அவர் சதமடித்து அசத்தினார். பாட்டியா 144 பந்தில் 4 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 130 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பசில் அகமது 36 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஐக்கிய அரபு அமீரகம் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா சார்பில் அர்ஷத் கான் 4 விக்கெட்டும், ஹர்ஷித் ரானா, சூர்யான்ஷ் ஷ்ட்கே, ஹர்ஷ் துபே, ஷாபாஸ் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது. இதில் வென்றால் இந்தியா ஏ அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.