கிரிக்கெட்

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்: வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் இந்தியா ஏ அபார வெற்றி

வைபவ் சூர்யவன்ஷி 28 பந்தில் சதமடித்து உலக சாதனை படைத்தார்.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி இந்தியா ஏ அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆப்கானிஸ்தான் 'ஏ', வங்கதேசம் 'ஏ'. இலங்கை 'ஏ'. ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா 'ஏ', நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் 'ஏ', ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதல் லீக் போட்டியில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது. 2வது லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி வீழ்ந்தது.

இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் இந்தியா 'ஏ' , ஐக்கிய அரபு அமீரகம் ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற யுஏஇ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஹர்பிரீத் சிங் பாட்டியா சதம்

அதன்படி, முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹர்பிரீத் சிங் பாட்டியா தனி ஆளாகப் போராடி சதமடித்து 130 ரன்கள் குவித்தார். பசில் அகமது 36 ரன்னில் அவுட்டானார்.

இந்தியா சார்பில் அர்ஷத் கான் 4 விக்கெட்டும், ஹர்ஷித் ரானா, சூர்யான்ஷ் ஷ்ட்கே, ஹர்ஷ் துபே, ஷாபாஸ் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு இணைந்த வைபவ் சூர்யவன்ஷி-அபிஷேக் சர்மா ஜோடி அதிரடியாக ஆடியது.

முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 12 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய பிரப்சிம்ரன் சிங் 3 ரன்னில் வெளியேறினார்.

3வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங்- சூர்யவன்ஷியுடன் இணைந்தார். இந்த ஜோடி 43 பந்தில் 137 ரன் குவித்தது.

28 சிக்சருடன் இரட்டை சதமடித்த சூர்யவன்ஷி

பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறவிட்ட சூர்யவன்ஷி 53 பந்தில் 28 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 204 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்தியா ஏ அணி 14.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 254 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

SCROLL FOR NEXT