கிரிக்கெட்

நியூசிலாந்து ஏ அணி உடனான 3வது டெஸ்ட்: இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 464/5 டிக்ளேர்

இந்திய அணியின் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 138 பந்தில் 16 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 102 ரன் எடுத்து அவுட்டானார்.

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 5 விக்கெட்டுக்கு 464 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்தியா `ஏ' அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாள்) தொடரில் விளையாடி வருகிறது.

முதல் இரு போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் லிங்கனில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ

டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா `ஏ' அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சதமடித்த ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அவர் 138 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 102 ரன் எடுத்து அவுட்டானார்.

ஜெய்ஸ்வால்- சாய் சுதர்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது.

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 15 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் துருவ் ஜூரல் ஜோடி சேர்ந்தார்.

முதல் நாள் முடிவில் இந்தியா `ஏ' அணி 69.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ரன் எடுத்தது. மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. சாய் சுதர்சன் 77 ரன்னும், துருவ் ஜூரல் 12 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

துருவ் ஜுரல், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் அரைசதம்

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 88 ரன்னில் அவுட்டானார். ரவீந்திர ஜடேஜா 25 ரன்னில் வெளியேறினார். அரை சதம் கடந்த துருவ் ஜுரல் 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.

6வது விக்கெட்டுக்கு இணைந்த திலக் வர்மா-வாஷிங்டன் சுந்தர் ஜோடி 114 ரன்கள் சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

இறுதியில், இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 464 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. திலக் வர்மா 81 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

SCROLL FOR NEXT