கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: உணவு இடைவேளையில் இந்தியா 96/1

இந்திய அணியில் மானவ் சுதார் அறிமுகம் ஆனார்.

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் முல்லன்பூர் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மானவ் சுதார் அறிமுகம் ஆனார்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர்.

அணியின் எண்ணிக்கை 41 ஆக இருந்தபோது ஜெய்ஸ்வால் 24 ரன்னில் அவுட்டானார். அடுத்து கே.எல்.ராகுலுடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் உணவு இடைவேளையில் ஒரு விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 37 ரன்னும், சாய் சுதர்சன் 32 ரன்னும் எடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது சலீம் சபி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.