கிரிக்கெட்

2வது டெஸ்ட்: போராடிய துருவ் ஜுரல்- இந்தியா முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட்

இந்தியாவின் துருவ் ஜுரல் அரை சதம் கடந்து 88 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரலின் அசத்தல் ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டாம் பிளெண்டல் 89 ரன்னும், டாம் லாதம் 59 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டும், குர்னூர் பிரார், அன்ஷுல் கம்போஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து திணறியது.

இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்து வருகிறது. ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் துருவ் ஜுரல் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

8வது விக்கெட்டுக்கு துருவ் ஜுரல்-அன்ஷுல் கம்போஜ் ஜோடி 46 ரன்னும், 9வது விக்கெட்டுக்கு துருவ் ஜுரல்-குர்னூர் பிரார் ஜோடி 64 ரன்னும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் தீப் 29 ரன் எடுத்து அவுட்டானார்.

இந்த இரு பார்ட்னர்ஷிப்பால் தான் இந்திய அணி 200 ரன்களை கடக்க முடிந்தது.

இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. துருவ் ஜுரல் 88 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமிசன் 4 விக்கெட்டும், மேட் ஹென்ரி, நாதன் ஸ்மித், ஜேக்கப் டபி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT