இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி
கிரிக்கெட்

முதல் டி20: இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

ஷாய் ஹோப், ரூதர்போர் அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது. இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று லக்னோவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் முதலில் களம் இறங்கியது. ஷாய் ஹோப், கமில் பூரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கமில் பூரன் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஷிம்ரன் ஹெட்மையர் (5), ரோவ்மேன் பொவேல் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஷாய் ஹோப், ரூதர்போர்டு அரைசதம்

அதன்பின் ஷாய் ஹோப் உடன் ஷேர்பேன் ரூதர்போர்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை கடக்க திணறினர். ராஸ்டன் சேஸ் (5), ரோமரியோ ஷெபர்டு (7), மேத்யூ போர்ட் (2), ஷமர் ஸ்பிரிங்கர் (9) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரூதர்போர்டு மட்டும் களத்தில் நிலைத்து நின்று விளையாடினார். ரூதர்போர்டு 34 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 56 ரன்கள் விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 19.1 ஓவரில் 171 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

அறிமுக வீரர் நமன் திர் 3 விக்கெட்

இந்திய அணியில் அறிமுகமான நமன் திர் 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். குல்தீப் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அக்சர் படேல் 3.1 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT