இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜான் கேம்ப்பெல் (101), ஷாய் ஹோப் (104), அமிர் ஜாங்கூ (114) சதம் விளாசினர்.
பின்னர் 406 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர் 32 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் குவித்தது. 11 ஓவரில் முடிவில் 98 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 55 ரன்களுடனும், சுப்மன் கில் 39 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.