சாய் சுதர்சன்- ஜெய்ஸ்வால்
கிரிக்கெட்

நியூசிலாந்து ஏ-க்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஜெய்ஸ்வால், சுதர்சன் அபாரம்

2-வது டெஸ்டில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால், இந்த டெஸ்டிலும் சதம் விளாசினார்.

இந்தியா- நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தியா `ஏ' அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வ டெஸ்ட் (4-வது நாள்) தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் லிங்கனில் இன்று தொடங்கியது.

நியூசிலாந்து `ஏ' பந்து வீச்சு தேர்வு

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தொடங்கியது. அதன்படி இந்தியா `ஏ' அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அவர் 138 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால்- சாய் சுதர்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது.

ஜெய்ஸ்வால் 102 ரன்கள் விளாசல்

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 15 ரன்னில் வெளியேறினார். 3-வது ஜெய்ஸ்வால் உடன் துருவ் ஜூரல் ஜேடி சேர்ந்தார். இந்தியா `ஏ' அணி 69.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மழையினால் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாய் சுதர்சன் 77 நாட்அவுட்

சாய் சுதுர்சன் 77 ரன்களுடனும், துருவ் ஜூரல் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜெய்ஸ்வால் முதல் மூன்று இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் விளாசினார். தற்போது 3-வது டெஸ்டிலும் சதம் விளாசியுள்ளார்.

இந்தியா- நியூசிலாந்து இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்குவார்.

SCROLL FOR NEXT