இந்தியா- நியூசிலாந்து இடையிலான 4-வது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்காநுயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியாவைச் சேர்ந்த ரோகித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். ருதுராஜ் கெய்க்வாட் 18 ரன்களிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினார்.
இதனால் இந்திய அணி நெருக்கடி ஏற்பட்டது. அக்சர் படேல் (46), இஷான் கிஷன் (46) ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் 200 ரன்களை நெருங்கியது.
கடைசி வீரராக களம் இறங்கிய அர்ஷ்தீப் சிங் டஃபி வீசிய ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார். அடுத்த ஓவரில் சிராஜ் ஒரு சிக்ஸ் விளாசினார். இதனால் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.
43-வது ஓவரை டஃபி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 209 ரன்களில் சுருண்டது. அர்ஷ்தீப் சிங் 4 பந்தில் 14 ரன்கள் அடித்தார். சிராஜ் 20 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து அணி சார்பில் ஜேக்கப் டஃபி, சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.