கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: 11-வது சதத்தை பதிவு செய்தார் சுப்மன் கில்- முதல் நாளில் இந்தியா 368/3

கே.எல். ராகுல், சுப்மன் கில் சதம் அடிக்க, ரிஷப் பண்ட் அரைசதம் விளாசினார்.

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையில் ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நியூ சண்டிகாரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் தேர்வு செய்தார்.

சாய் சுதர்சன்- கே.எல். ராகுல்

அதன்படி இந்தியாவின் ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 81 ரன்கள் சேர்த்தார். கே.எல். ராகுல் சரியாக 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சுப்மன் கில்- ரிஷப் பண்ட்

3-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. இன்று 85 ஓவர்கள் வீசப்பட்டன. 85-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார். 83-வது ஓவரின் 5-வது பந்தில் சுப்மன் கில் ஒரு ரன் அடித்து சதம் விளாசினார். இது அவருடைய 11-வது சதம் ஆகும்.

இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 103 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.