இந்தியா- ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டி இந்தியா- ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டி
கிரிக்கெட்

25 ஓவராக குறைப்பு: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா பந்து வீச்சு தேர்வு..!

மழைக் காரணமாக 50 ஓவர் போட்டி, 25 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இருவர் அறிமுகமாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தரம்சாலாவில் தொடங்கியது. மதியம் 1.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையால் காலதாமதம் ஆனது. இறுதியாக 5.15 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது.

இந்திய அணியில் இருவர் அறிமுகம்

50 ஓவர் போட்டி 25 ஓவராக குறைக்கப்பட்டது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் குர்னூர் ப்ரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். பிரின்ஸ் யாதவ், குல்தீப் யாதவுக்கு ஆடம் லெவனில் இடம் கிடைக்கவில்லை.