ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை போட்டி 2026 இறுதி போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. குரூப் பிரிவில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில், இரண்டு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்நிலையில் இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலியின் அணியின் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா மகளிர் அணி: ஜார்ஜியா வோல், பெத் மூனி(w), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லீ கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம், அன்னாபெல் சதர்லேண்ட், நிக்கோலா கேரி, சோஃபி மோலினக்ஸ்(c), கிம் கார்த், லூசி ஹாமில்டன்
இங்கிலாந்து மகளிர் அணி: ஏமி ஜோன்ஸ்(w), டானி வியாட்-ஹாட்ஜ், நாட் சிவர்-பிரன்ட்(c), ஆலிஸ் கேப்சி, ஹீதர் நைட், ஃப்ரேயா கெம்ப், டேனியல் கிப்சன், சார்லட் டீன், லின்சி ஸ்மித், சோஃபி எக்லெஸ்டோன், லாரன் பெல்.