கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதல் 5 இடத்திற்குள் முன்னேறினார் ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வால் 791 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.குல்தீப் யாதவ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதால் தரவரிசையில் முன்னேற்றம்.

மாலை மலர்

கிரிக்கெட் தரவரிசைக்கான அப்டேட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது. டெல்லி போட்டியில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால், பேட்டர்கள் தரவரிசையில் முதல் 5 இடத்திற்குள் முன்னேனியுள்ளார்.

23 வயதான ஜெய்ஸ்வால், 7ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் 791 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 14ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் 689 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்க்கான பேட்டர்கள் தரவரிசையில் சுப்மன் கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.