கிரிக்கெட்

ஐசிசி-யின் ஒருநாள் தரவரிசையில் முதல் இடம் பிடித்த இலங்கை வீரர்

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2-வது இடத்தில் உள்ளார்.பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மாலை மலர்

ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களில் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை பின்னுக்கு தள்ளி இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 3-வது இடத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் 10-வது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்-ம் உள்ளனர்.

நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.