கிரிக்கெட்

ஐசிசி டி20 தரவரிசை: பந்துவீச்சில் முதலிடத்துக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை

மூன்று போட்டிகளில் விளையாடிய ஸ்ரீசரணி மொத்தம் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட் அணிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதன்படி, டி20 தரவரிசைக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய மகளிர் அணி சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணி டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசையில் முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடிய ஸ்ரீசரணி மொத்தம் 10 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் சார்லி டீன் 2வது இடத்திலும், லின்ஸே ஸ்மித் 3வது இடத்திலும் நீடிக்கின்றனர்.