ஐசிசி வெளியிட்ட ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டுள்ளார். டாப் 5 பட்டியலில் இந்திய அணியின் 3 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 802 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
இந்திய அணியின் சுப்மன் கில் (2-வது இடம்), விராட் கோலி (3-வது இடம்), ரோகித் சர்மா (4-வது இடம்) ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சுப்மன் கில் மொத்தமாக 188 ரன்கள் குவித்து, 802 புள்ளிகளுடன், ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
விராட் கோலியும், ரோகித் சர்மாவும், இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் முன்னேறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் இப்ராகிம் சட்ரன் 5வது இடத்தில் உள்ளார்.
இதேபோல், டெஸ்ட் அணிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் சுப்மன் கில் ஒரு இடம் சரிந்து 7-வது இடம் பிடித்துள்ளார். ஜெய்ஸ்வால் 9வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.