கிரிக்கெட்

ICC அக்டோபர் மாத சிறந்த வீராங்கனை விருது வெல்வாரா தீப்தி சர்மா?

அக்டோபர் மாத ஐசிசி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென் இடம்பிடித்துள்ளார்.

அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் மார்கோ யான்சென், அராபத் மினாஸ், ஷாய் ஹோப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஐசிசியின் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென், பாகிஸ்தானின் அராபத் மினாஸ், வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முன்னேற்றம் கண்டு நம்பர் 1 ஆல் ரவுண்டராக முன்னேறியவர்.

பாகிஸ்தானின் அராபத் மினாஸ், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுக்கு 40 ரன்கள் கொடுத்து சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடி 162 ரன்கள் குவித்தார்.

இதேபோல், சிறந்த வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா, ஆஸ்திரேலியாவின் அன்னபெல் சதர்லேண்ட், வங்கதேசத்தின் சோபனா மோஸ்த்ரே இடம்பிடித்துள்ளனர்.

சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார் தீப்தி சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் அக்டோபர் மாத சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதினை யார் வெல்லப் போகிறார்கள் என ரசிகர்கள் முடிவு செய்ய உள்ளனர்.

SCROLL FOR NEXT