வீராங்கனைகள் 
கிரிக்கெட்

ICC Award | பிப்ரவரி மாத சிறந்த வீராங்கனை விருது பெறுவாரா அருந்ததி ரெட்டி?

சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.

மாலை மலர்

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தானின் சாஹிப்சாதா பர்ஹான், இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஷாட்லி வான் ஸ்கால்க்விக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஹர்ஷிதா சமரவிக்ரமா, பாத்திமா சனா மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்து எந்த வீரரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.