பெண்களுக்கான கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் அணியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்லீன் தியோல் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தற்போதைய இந்தியா அல்லது இந்தியா `ஏ' அணியில் இடம் பெறவில்லை. இதனால் கரீபியன் பிரீமியர் லீக் முடியும் வரை பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணிக்காக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெண்கள் கரீபியன் பிரீமியர் லீக்கில 4 இந்திய வீராங்கனைகள் விளையாடும் நிலையில், 5-வது வீராங்கனையாக இணைந்துள்ளார்.
ஹர்லீன் தியோல் 28 டி20 போட்டிகளில் விளையாடி 311 ரன்கள் (20 இன்னிங்ஸ்) அடித்துள்ளார். இவர் கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கெதிராக மார்ச் மாதம் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார்.
இவர் குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியார்ஸ் அணிகளுகுகான பெண்கள் பிரீமியர் லீக்கில் விளையாடியுள்ளார். ஷிகா பாண்டே, யாஷ்திகா பாதியா, பூஜா வாஸ்த்ரகர், கிரண் நவ்கிர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.