ஹர்திக் பாண்ட்யா
கிரிக்கெட்

பெங்களூரு சிறப்பு மையத்தில் ஹர்திக் பாண்ட்யா: க்ரீன் சிக்னல் காட்டிய மெடிக்கல் டீம்..!

பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு, ஹர்திக் பாண்ட்யா உடற்தகுதிக்கான அறிக்கையை மெடிக்கல் டீமிடம் வழங்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளார். இருந்தபோதிலும் அவரது உடற்தகுதி பொறுத்துதான் ஆடும் லெவனில் சேர்ப்பது உள்ளது என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

மேலும், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்திற்கு சென்று, உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதனடிப்படையில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பு மையம் சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், உடற்தகுதி குறித்து அறிக்கையை அங்குள்ள மெடிக்கல் டீமிடம் ஒப்படைத்துள்ளார். அத்துடன் மெடிக்கல் டீமிடம் இருந்து clearance (அனுமதி) பெற்றுள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் தொடரில் ஹர்திக் பாண்ட்யா விளையாட வாய்ப்புள்ளது.

94 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்ட்யா கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன்பின் ஒருநாள் போட்டியில் விளையாடாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.