கிரிக்கெட்

ஐசிசி ஒருநாள் தரவரிசை: அசுர வேகத்தில் முன்னேறிய இந்திய பந்துவீச்சாளர்

குர்னூர் பிரார் இந்தத் தொடரில் இதுவரை 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் 60 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் குர்னூர் பிரார் அசுர வேகத்தில் முன்னேறியுள்ளார்.

இந்திய வீரர்கள் முன்னேற்றம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய இந்திய வீரர்கள் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஆல் ரவுண்டரான அக்சர் படேல் வெலிங்டனில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் 28 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 23 இடம் முன்னேறி 21-வது இடம் பிடித்துள்ளார்.

ஆக்லாந்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், 11 இடம் முன்னேறி 31-வது இடம் பிடித்துள்ளார்.

பிரார் அசத்தல்

இந்தத் தொடரில் இதுவரை 7 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த வீரராக உள்ள குர்னூர் பிரார், 100-வது இடத்துக்கு வெளியே இருந்த நிலையில், 60 இடம் முன்னேறி 48-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

SCROLL FOR NEXT