இந்தியா ஆப்கானிஸ்தான் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், இன்று தர்மசலா கிரிக்கெட் ஸ்டேடிடயத்தில் தொடங்கியது.
இதில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், 50 ஓவர் 25 ஓவராக குறைக்கப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது.
இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்க் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 51 பந்துகளில் 102 ரன்கள் அடித்து, அணியை சரிவிலிருந்து மீட்டார்.
இதையடுத்து ஆட்ட நேர முடிவில் அந்த அணி 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியின் சார்பில் ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் தலா மூன்று விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.