டி20 கிரிக்கெட் பேட்டர்களுக்கு சாதகமாக உள்ளது. குறுகிய ஓவர்களை கொண்ட இந்த வடிவிலான கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளை பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. இதற்கிடையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இம்பேக்ட் பிளேயர் விதி உள்ளது. இதன்மூலம் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அணியில் இடம் பெறுகிறார்கள். அத்துடன் பிளாட் பிட்ச் காரணமாக 200 ரன்களுக்கு மேல் எளிதாக குவிக்க முடிகிறது. இதனால் பேட்டர்கள்- பவுலர்கள் இடையிலான சமநிலை காணப்படுவதில்லை.
இந்த நிலையில் பேட்டர்கள்- பவுலர்கள் இடையே சமநிலை நிலவ வேண்டும் என்றால் மூன்று முக்கிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரேக் சேப்பல் கூறியதாவது:-
ஒரு அணி பேட்டிங் செய்யும் போது தற்போது 10 விக்கெட்டுகளையும் இழந்தால் ஆல்-அவுட் என கருதப்படுகிறது. இதை 6 விக்கெட்டாக குறைக்க வேண்டும். தற்போது விக்கெட் இழந்தாலும் என்ன? எனக் கருதி அதிவேகமாக ஆடுகிறார்கள். 6 விக்கெட் என்று இருந்தால் புத்திசாலித் தனமாக விக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு விளையாட நினைப்பார்கள்.
ஆடுகளத்தில் 3மிமீ அளவிற்கு புற்கள் இருக்க வேண்டும். பந்து வீச்சாளர்களகு்கு இது சீம் மூவ்மென்ட் மற்றும் கேரிக்கு உதவும். அத்துடன் ஒரு பக்கம் புற்கள் மறுபக்கம் பிளாட் என்ற வகையில ஆடுகளம் அமைக்க வேண்டும். இது டேக்டிக்கல் வெரைட்டியை உருவாக்கும்.
தற்போது உள்ள எல்.பி.டபிள்யூ. முறையை மாற்ற வேண்டும். பந்து எந்த இடத்தில் பிட்ச் ஆகி ஸ்டம்பை தாக்கினாலும் விக்கெட் கொடுக்க வேண்டும்.
இந்த மூன்று மாற்றங்களை செய்தால், தற்போது பேட்டர்களுக்கு சாதகமான டி20 கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களும் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு கிரேக் சேப்பல் தெரிவித்தார்.