கிரிக்கெட்

ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் பந்துவீச இன்னும் தயாராகவில்லை - கவுதம் கம்பீர்

முழு உடல் தகுதி பெற்ற பிறகு, அவரும் நிதிஷும் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியாவை அவசர கதியில் களமிறக்க விரும்பவில்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும், அவரை முழுநேர ஆல்-ரவுண்டராக பங்களிக்கும் வகையில் முழு உடற்தகுதி பெற்ற பிறகே ஹர்திக் அணியில் இடம்பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

50 ஓவர் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளருக்கான முழு ஒதுக்கீடான 10 ஓவர்களை வீச ஹர்திக் பாண்டியா இன்னும் தயாராகவில்லை என்றும், இந்த நட்சத்திர ஆல்-ரவுண்டரை சர்வதேச கிரிக்கெட்டில் அவசரப்பட்டு மீண்டும் களமிறக்க மாட்டோம் என்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

10 ஓவர்கள் பந்துவீத முடியாது:

இந்தியாவின் குறைந்த ஓவர் கிரிக்கெட் அணியில் முக்கிய அங்கமாக திகழும் பாண்டியா, அவரது உடல் தகுதி மற்றும் பணிச்சுமை காரணங்களால் பெரும்பாலும் கவனமாகவே கையாளப்பட்டு வருகிறார்.

பாண்டியா பந்துவீசுவதற்கான முழு உடல் தகுதியை எட்டியதும், அவரும் இளம் ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டியும் ஒரே நேரத்தில் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கம்பீர் குறிப்பிட்டார்.

"ஹர்திக் பாண்டியா தற்போதைய நிலையில் 10 ஓவர்கள் பந்துவீச முடியாது. அவரை சர்வதேச கிரிக்கெட்டில் அவசரப்பட்டு களமிறக்க நாங்கள் விரும்பவில்லை. அவர் முழு உடல் தகுதி பெற்ற பிறகு, அவரும் நிதிஷும் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது," என்று கம்பீர் கூறினார்.

ஆல்-ரவுண்டராக பங்களிக்க வேண்டும்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில் பயிற்சியாளரின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.

ஒருநாள் (ODI) போட்டிகளில் அவரை அதிகம் பயன்படுத்த அணி நிர்வாகம் விரும்புவதால், வெறும் பேட்டிங் திறனுக்காக மட்டும் அவரைத் தேர்ந்தெடுக்காமல், ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராக பங்களிக்கும் திறனை பொறுத்தே அவரது வருகை அமையும் என்பதை இது உணர்த்துகிறது.

பி.சி.சி.ஐ.-இன் 'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' (Centre of Excellence) அமைப்பிடமிருந்து இறுதி உடல் தகுதி சான்றிதழ் கிடைப்பதற்கு உட்பட்டு, புதுச்சேரியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய 'ஏ' அணியில் பாண்டியா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT