இந்திய அணி நியூசிலாந்து சென்று மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது. நேற்றுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்தது. இதில் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தொடரை கைப்பற்றியது. அதன்பின் கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் தொடரை 3-2 என வென்றது.
இதனைத் தொடர்ந்து 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. ஒருநாள் போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடுகின்றனர்.
இந்த நிலையில் டி20 தொடரை கைப்பற்றியது தொடர்பாக தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாவது:-
இந்தத் தொடரை வெல்வதன் மூலம், எஞ்சிய சுற்றுப் பயணத்திற்கு தேவையான அடித்தளத்தை நீங்கள் அமைத்து கொடுத்து விட்டீர்கள் என்று நான் கருதுகிறேன். தொடர் தொடங்குவதற்கு முன்பே, இந்த அடித்தளத்தை அமைக்கும் பொறுப்பு உங்களிடம் (இந்திய டி20 அணி) உள்ளது என்று நான் கூறியிருந்தேன். இப்போது, நீங்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டிய பொறுப்பு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுடையது.
இவ்வாறு கம்பீர் தெரிவித்துள்ளார்.