கிரிக்கெட்

ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்: இன்ப அதிர்ச்சி கொடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்

முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் தொடங்குகிறது.

இந்தியா-இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் தொடங்குகிறது.

பும்ரா விலகல்

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரபல பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் வீரர் என்ற பெருமையை ஆகிப் நபி பெறுகிறார்.

இந்திய அணியின் விவரம்

சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சாரான்ஷ் ஜெயின், ஆகிப் நபி.

இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ரசிகர்களுக்கு இலவசம்

இதுதொடர்பாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான போட்டிகளைக் காணப் பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

இதன்மூலம் உலகத்தரம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காணும் சிறந்த வாய்ப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கிடைக்கிறது என தெரிவித்துள்ளது.