கிரிக்கெட்

ஓய்வை அறிவித்த தமிழக வீரர் பாபா அபராஜித்

பாபா அபராஜித் யு19 உலகக் கோப்பை, இந்தியா ஏ அணிகளில் விளையாடி அசத்தியுள்ளார்.

தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டனான பாபா அபராஜித் தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பாபா அபராஜித், தனது 32வது வயதில் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் அவரது 15 ஆண்டுகால உள்ளூர் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

102 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ள இவர் 5,199 ரன்களும், 75 விக்கெட்டுகளும், 114 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 4,278 ரன்களும், 83 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

பாபா அபராஜித் யு19 உலகக் கோப்பை, இந்தியா ஏ அணிகளில் விளையாடி அசத்தியுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டில் நடந்த யு19 உலகக் கோப்பையில் 171 ரன்கள், 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான காலிறுதி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

மொத்தமாக 20 சதம் அடித்துள்ள பாபா அபராஜித் விஜய் ஹசாரேவில் 2017-18, சையத் முஷ்டாக் அலி தொடரில் 2020-21, 2021-22 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இருந்துள்ளார்.

இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற பாபா அபராஜித்தின் கனவு கடைசிவரை நனவாகவில்லை.

SCROLL FOR NEXT