கிரிக்கெட்

வருகிறது ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்: உரிமையாளர்களாகிய கிரிக்கெட் வீரர்கள்

அயர்லாந்து கிரிக்கெட் போர்டு முயற்சியால் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட இருக்கிறது.

ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் வருகிற ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி முதல் செப்டம்பர் 20-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 6 பிரான்சைஸ் அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 33 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.

கிளாஸ்கோ, ஆம்ஸ்டர்டாம், எடின்பர்க், டப்ளின், பெல்பாஸ்ட், ரோட்டர்டாம் ஆகிய 6 நகரங்களை மையமாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்காட்லாந்தை பிரதிநிதித்துவம் படுத்தும் கிளாஸ்கோ நகரை மையமாக கொண்டு கிளாஸ்கோ முகாஃபியான்ஸ் அணி விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகாஃபி குரூப் நிறுவன பங்குதாரராகவும், தன்ஷா பத்ரா உரிமையாளராகவும் செயல்பட இருக்கிறது. இணை உரிமையாளராக கிறிஸ் கெய்ல் இணைந்துள்ளார்.

ஆம்ஸ்டர்டாம் அணியை ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் வாக் மற்றும் ஹாக்கி ஜாம்பவான் ஜேமி டுவயர் வாங்கியுள்ளனர். மிட்செல் மார்ஷ் கேப்டனாக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்பாஸ்ட் அணியின் இணை உரிமையாளர் மேக்ஸ்வெல் ஆவார். எடின்பர்க் அணியை நியூசிலாந்தின் கைல் மில்ஸ், நாதன் மெக்கல்லம் வாங்கியுள்ளார். மிட்செல சான்ட்னெர் கேப்டனாக செயல்படுவார். ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் அயர்லாந்து கிரிக்கெட் போர்டு மற்றும் ரூல்ஸ் குளோபல் (Rules X) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இந்த தொடரின் இணை நிறுவனர்களில் ஒருவர் அபிஷேக் பச்சான் ஆவார்.