இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
செம்ஸ்போர்டில் நடந்தமுதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி பிரிஸ்டோலில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. கடைசி கட்டத்தில் இறங்கிய பிரேயா கெம்ப் 13 பந்தில் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. யஸ்திகா பாட்டியா 33 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 32 ரன்னும், ஹர்மன்பிரீத் கவுர் 28 ரன்னும், ஷபாலி வர்மா 22 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினர்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன்மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.
இங்கிலாந்து சார்பில் பிரேயா கெம்ப், லாரன் பெல், சார்லட் டீன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.