கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி: குசால் மெண்டிஸ் சதம்-இங்கிலாந்து வெற்றிபெற 322 ரன்களை நிர்ணயித்தது இலங்கை

இலங்கையின் குசால் மெண்டிஸ் 100 பந்தில் 121 ரன்கள் குவித்தார்.

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 322 ரன்களை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வென்ற இங்கிலாந்து தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி லீட்சில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ் தொடக்க வீரர்களாக இறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 45 ஆக இருக்கும்போது பதும் நிசங்கா 25 ரன்னில் அவுட்டானார்.

அரை சதமடித்த கமிந்து

கமிந்து மெண்டிசுடன் குசால் மெண்டிஸ் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. கமிந்து மெண்டிஸ் அரை சதம் கடந்தார்.

2வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் கமிந்து மெண்டிஸ் 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.

குசால் மெண்டிஸ் சதம்

சிறப்பாக ஆடிய குசால் மெண்டிஸ் சதமடித்து அசத்தினார்.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவன் ரத்நாயகே 48 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 321 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன், ரேஹான் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT