கிரிக்கெட்

2வது டி20 போட்டி: இங்கிலாந்து வெற்றிபெற 185 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா

இங்கிலாந்தின் சாம் கரன், குரோகாம்பே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி குயின்ஸ்லேந்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. நிகில் சவுத்ரி 35 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார்.

ஜோயல் டேவிஸ் அதிரடி

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜோயல் டேவிஸ் 25 பந்தில் 39 ரன்கள் குவித்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து சார்பில் சாம் கரன், குரோகாம்பே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT