இங்கிலாந்து - இந்தியா  
கிரிக்கெட்

முழு ஸ்வீப்.. இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து - ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம்

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்தது. இந்நிலையில் இறுதி டி20 போட்டியிலும் இந்தியா தோற்றுள்ளது.

போட்டி

இந்தியா- இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது மட்டும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் சூரியவன்ஷி நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்தின் பில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

சால்ட் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜாஸ் பட்லருடன் கேப்டன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து சிதறடித்தது. இதனால் இந்தியா பந்துவீச்சாளர்களுக்கு எப்படி தான் பந்து வீச வேண்டும் என்று தெரியாமல் விழித்தனர்.

ஜாஸ் பட்லர் சதம்

இங்கிலாந்து 5.3 ஓவரில் 50 ரனகளை கடந்தது. 9.3 ஓவரில் நூறு ரண்களை தொட்டது. ஹாரி ப்ரூக் 19 பந்தில் 50 ரன்கள் அடித்தார். ஜாஸ் பட்லர் 34 பந்தில் அரைசதம் அடித்தார். அரை சதம் அடித்த பின் ஜாஸ் பட்லர் விஸ்வரூபம் எடுத்தார்.

அவர் அடுத்த 17 பந்தில் 50 ரன்கள் எடுத்து 51 பந்தில் சதம் அடித்தார். இதில் ஒன்பது பவுண்டரி ஆறு சிக்ஸர்கள் அடங்கும். இங்கிலாந்து அணி 15.4 ஓவரில் 200 ரன்களை தொட்டது.

இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 87 பந்தில் 200 ரன்கள் விளாசியது. பட்லர் 64 பந்தில் 131 ரன்கள் எடுத்து துபே பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் பெத்தேல் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்திருந்தது.

20-வது ஓவரை பிரின்ஸ் யாதவ் வீசினார். முதல் பந்தை ஹாரி ப்ரூக் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. 3-வது பந்தில் ஒரு ரன் அடித்தார்.

இதனால் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்துள்ளது. ஹார் ப்ரூக் 45 பந்தில் 95 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார்.

மூன்று விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து எடுத்த 257 ரன்கள், ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.

இதற்கு முன்னர், வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 246 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து, அதிகபட்ச ஸ்கோருக்கான சாதனையை தன்வசம் வைத்திருந்தது.

இந்தியா ஆட்டம்

258 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்தியா, மோசமான தொடக்கத்தைப் பெற்றது.

அபிஷேக் சர்மா 3 ரன்களிலும் மற்றும் சஞ்சு சாம்சன் 27 ரன்களிலும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் போராடி 56 ரன்களும், திலக் வர்மா 53 ரன்களும் எடுத்தனர்.

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் எடுத்தார், மற்ற பேட்ஸ்மேன்கள் எந்த தாக்கத்தையு ஏற்படுத்தவில்லை.

8 விக்கெட் இழப்புக்கு இந்தியா 201 ரன்கள் மட்டுமே இறுதியில் எடுத்திருந்தது.

வெற்றி - தோல்வி

இதன்மூலம் இந்தியாவை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம், இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.

இந்தத் தோல்வியின் மூலம், இந்தியா ஒரு டி20 தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தோல்வியை பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்னர் அயர்லாந்தும் ஒரு டி20 தொடரில் இந்தியாவைத் தோற்கடித்திருந்தது.