கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் சோபியா டன்க்ளே அரை சதம் கடந்து 57 ரன்கள் எடுத்தார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.

இங்கிலாந்து அணி இலங்கை, அயர்லாந்து அணிகளை வீழ்த்தியது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி நேற்று ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் சோபியா டன்க்ளே அரை சதம் கடந்து 57 ரன்கள் எடுத்தார். அலைஸ் கேப்சி 40 ரன் எடுத்தார்.

பிரேயா கெம்ப் 39 ரன்னும், டேனிலி கிப்சன் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

சாரா பிரைஸ் 34 ரன்னும், டார்சி கார்டர் 29 ரன்னும், பிப்பா ஸ்ப்ரூல் 27 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

நடப்பு தொடரில் இங்கிலாந்து ஆடிய 3 போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT