பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்துல்லா ஷபிக் பொறுப்புடன் ஆடி 61 ரன்களும், இமாம் உல்ஹக் 42 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஆலி ராபின்சன், ஜோஷ் டங் தலா 5 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. எமிலியோ 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோர்டன் காக்ஸ், கேப்டன் ஜோ ரூட் ஜோடி இதுவரை 64 ரன் சேர்த்துள்ளது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 25 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. ஜோர்டன் காக்ஸ் 23 ரன்னும், கேப்டன் ஜோ ரூட் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் ஆட்டம் தாமதமானது. சிறப்பாக ஆடிய ஜோர்டன் காக்ஸ், ஜோ ரூட் அரை சதம் கடந்தனர். 3வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோர்டன் காக்ஸ் 73 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஜோ ரூட் 66 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஹாரி புரூக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். டான் லாரன்ஸ் 51 ரன்னில் வெளியேறினார். இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 409 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி 238 ரன்கள் முன்னிலை பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் அலி உஸ்மான் 5 விக்கெட்டும், குர்ரம் ஷசாத் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
238 ரன்கள் பின்தங்கிய நிலையில், பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. 3வது விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்தனர்.
முகமது ரிஸ்வான் மட்டும் தனியாகப் போராடினார். அவர் 41 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், ஆலி ராபின்சன், ஜோஷ் டங் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.