கிரிக்கெட்

3வது போட்டியில் வெற்றி: ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து

133 ரன் குவித்த இங்கிலாந்தின் பென் டக்கெட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 97 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2வது போட்டியில் இங்கிலாந்தும் வென்று ஒருநாள் தொடர் 1-1 என சமனில் இருந்தது.

3வது ஒருநாள் போட்டி

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

சதமடித்த பென் டக்கெட்

அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 48.3 ஓவரில் 328 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பென் டக்கெட் அதிரடியாக ஆடி 115 பந்தில் 133 ரன்கள் குவித்தார். வில் ஜாக்ஸ் 48 பந்தில் 59 ரன்னும், டாம் பாண்டன் 35 பந்தில் 44 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் ஜாக் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டும், மேட் ரென்ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவரில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மேட் ரென்ஷா அரை சதம் கடந்து 55 ரன் எடுத்து அவுட்டானார். அலெக்ஸ் கேரி 37 ரன்னும், ஜாக் எட்வர்ட்ஸ் 31 ரன்னும், கூப்பர் கனோலி 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடரை வென்ற இங்கிலாந்து

இதன்மூலம் இங்கிலாந்து அணி 97 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

ஆட்ட நாயகன் விருது பென் டக்கெட்டுக்கும், தொடர் நாயகன் விருது டாம் பாண்டனுக்கும் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT