கிரிக்கெட்

பாகிஸ்தான் 171 ரன்னில் ஆல் அவுட்: முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 112/2

இங்​கிலாந்​து சார்​பில்​ ஆலி ராபின்​சன், ஜோஷ் டங்​ தலா 5 விக்கெட் வீழ்த்தினர்​.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில்​ பேட்​ செய்​த பாகிஸ்​தான்​ அணி 48.1 ஓவரில் 171 ரன்​களுக்கு ஆல் அவுட்டானது. அப்​துல்​லா ஷபிக்​ பொறுப்புடன் ஆடி 61 ரன்களும், இமாம்​ உல்​ஹக்​ 42 ரன்களும் எடுத்தனர்.

இங்​கிலாந்​து சார்​பில்​ ஆலி ராபின்​சன், ஜோஷ் டங்​ தலா 5 விக்கெட் வீழ்த்தினர்​.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. எமிலியோ 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோர்டன் காக்ஸ், கேப்டன் ஜோ ரூட் ஜோடி இதுவரை 64 ரன் சேர்த்துள்ளது.

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 25 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. ஜோர்டன் காக்ஸ் 23 ரன்னும், கேப்டன் ஜோ ரூட் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 59 ரன்கள் பின்தங்கி உள்ளது.