லார்ட்ஸ் டெஸ்ட்
கிரிக்கெட்

லார்ட்ஸ் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில் 357 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் இங்கிலாந்து

லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்றால் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றும்.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் அணி 110 ரன்களில் சுருண்டது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 27-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஜோர்டன் காக்ஸ் 55 ரன்களும், ஜேமி ஸ்மித் 61 ரன்களும், கஸ் அட்கின்சன் 45 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அபப்ாஸ் 4 விக்கெட்டும், முகமது அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். குர்ரம் ஷேசாத் மற்றும அலி உஸ்மான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்

பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஷான் மசூத் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அப்துல்லா ஷபிக் 5 ரன்களிலும், பாபர் அசாம் 8 ரன்களிலும், சாத் ஷகீல் 16 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 7 ரன்களிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் அசான் அவைஸ் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அலி உஸ்மான், குர்ரம் ஷேசாத் தலா ஒரு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இமாம்-உல்-ஹக் காயம் காரணமாக களம் இறங்காததால் பாகிஸ்தான் 110 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் அணியால் 37.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸ்

180 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. முன்னணி வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்த போதிலும், டான் லாரன்ஸ் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போது வரை இங்கிலாந்து 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் கைவசம் 3 விக்கெட் உள்ளது. இதனால் 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு கடினமான இலக்காகும். இதனால் இங்கிலாந்து இந்த போடடியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது.