ஜோ ரூட்
கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்..!

இங்கிலாந்து அணி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால், இங்கிலாந்து அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 354 ரன்கள் குவிப்பு

3-வது மற்றும் கடைசி போட்டி கடந்த 25-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 354 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

இங்கிலாந்துக்கு 373 ரன்கள் வெற்றி இலக்கு

இதனால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 84 ரன்கள் முன்னிலைப் பெற்றது. ஆனால் 2-வது இன்னிங்சில் அந்த அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை. 9 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்துக்கு 373 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 9 ரன்களுடனும், எமிலியோ கே 6 ரன்களுடனும் களத்தில் இருந்தது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 270 ரன்கள் தேவைப்பட்டது.

இன்று கடைசி நாள்

இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எமிலியோ 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஸ்மித் களம் இறங்கியுள்ளார். இதே ஓவரின் 5-வது பந்தில் ஜோ ரூட் ரன்அவுட் ஆனார். அவர் 18 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் இங்கிலாந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

கைவசம் 4 விக்கெட் உள்ளது. 257 ரன்கள் தேவைப்படுகிறது. சுமார் 80 ஓவர்களை இங்கிலாந்து தாக்குப்பிடித்தால் மட்டுமே இந்த போட்டியை டிரா செய்ய முடியும் இல்லையென்றால் வெற்றி பெற முடியும். இதற்கு வாய்ப்பு மிகவும் கடினம்.