ஹாரி ப்ரூக்- ஜாஸ் பட்லர்
கிரிக்கெட்

இந்திய பந்து வீச்சை கிழித்தெறிந்த பட்லர்- ப்ரூக் ஜோடி: 258 ரன்கள் இலக்கு..!

ஜாஸ் பட்லர் 64 பந்தில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 45 பந்தில் 95 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது மட்டும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் சூரியவன்ஷி நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்தின் பில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சால்ட் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜாஸ் பட்லருடன் கேப்டன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து சிதறடித்தது. இதனால் இந்தியா பந்துவீச்சாளர்களுக்கு எப்படி தான் பந்து வீச வேண்டும் என்று தெரியாமல் விழித்தனர்.

ஜாஸ் பட்லர் சதம்

இங்கிலாந்து 5.3 ஓவரில் 50 ரனகளை கடந்தது. 9.3 ஓவரில் நூறு ரண்களை தொட்டது. ஹாரி ப்ரூக் 19 பந்தில் 50 ரன்கள் அடித்தார். ஜாஸ் பட்லர் 34 பந்தில் அரைசதம் அடித்தார். அரை சதம் அடித்த பின் ஜாஸ் பட்லர் விஸ்வரூபம் எடுத்தார். அவர் அடுத்த 17 பந்தில் 50 ரன்கள் எடுத்து 51 பந்தில் சதம் அடித்தார். இதில் ஒன்பது பவுண்டரி ஆறு சிக்ஸர்கள் அடங்கும். இங்கிலாந்து அணி 15.4 ஓவரில் 200 ரன்களை தொட்டது.

இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 87 பந்தில் 200 ரன்கள் விளாசியது. பட்லர் 64 பந்தில் 131 ரன்கள் எடுத்து துபே பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் பெத்தேல் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்திருந்தது.

20-வது ஓவரை பிரின்ஸ் யாதவ் வீசினார். முதல் பந்தை ஹாரி ப்ரூக் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. 3-வது பந்தில் ஒரு ரன் அடித்தார். இதனால் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்துள்ளது. ஹார் ப்ரூக் 45 பந்தில் 95 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார்.