துலீப் டிராபி
கிரிக்கெட்

துலீப் டிராபி: வடகிழக்கு மண்டல அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய கிழக்கு மண்டலம்

வடகிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 111 ரன்களிலும், 2-வது இன்னிங்சில் 146 ரன்களிலும் ஆல்அவுட் ஆனது.

துலீப் டிராபி காலிறுதி ஒன்றில் கிழக்கு- வடகிழக்கு மண்டலம் இடையிலான போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வடகிழக்கு மண்டலம் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி கிழக்கு மண்டலம் முதலில் பேட்டிங் செய்தது. சுதிப் குமார் கராமி 185 பந்தில் 146 ரன்கள் விளாசினார். இதனால் முதல் இன்னிங்சில் கிழக்கு மண்டலம் 467 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

வடகிழக்கு மண்டலம்

பின்னர், வடகிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கியது. அபித் சர்கார் (5), ஷபாஸ் அகமது (3) அபாரமாக பந்து வீச வடகிழக்கு மண்டலம் 111 ரன்களில் ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

இதனால் வட கிழக்கு மண்டலம் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் வடகிழக்கு மண்டலம் பேட்ஸ்மேன்கள் திணறினர். இதனால் 146 ரன்களில் சுருண்டது. இதனால் காரணமாக கிழக்கு மண்டலம் 210 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அனுகுல் ராய் 5 விக்கெட்டும், வைபவ் சூர்யவன்ஷி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.